அழகு வெள்ளிக்கிழமை அதிகாலைகளில் மட்டும் வருவது எப்படி
தூங்கும் போதும்
கண்ணை விட்டு
அகலா அழகு
சோம்பி நிற்கும் கோயில்
சிலையும் ஆவலுடன்
காத்திருக்கும் உன்
வருகைக்கான அழகு
கோலம் போடும் தரையும்
தரைபெறும் கோலமும்
உனக்காக ஒன்றுடன் ஒன்று
மோதிக் கொள்ளும் அழகு
சின்னக் குழந்தையும்
உன் கன்னம் தொட்டு
சிரித்துப் பார்க்கும் அழகு
சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?