அன்று நீ சொன்னது
அன்று உன் மெல்லிய
கிசுகிசுத்த குரலில்
நீ..
என் காதுகளில்
சொல்லிவிட்டு ..
சென்ற வார்த்தைகள் ..
..
உன்னை நான்
விரும்புகிறேன்.
..
அவை ..
என் மனதில் நுழைந்து..
இளம் சூடாக
உடலெங்கும் பரவி..
என்னை படிக்க வைத்தன
சிறக்க வைத்தன
உயர வைத்தன..
உயிரே நீயென
நினைக்க வைத்தன..
உலகையே உனக்காக
எதிர்க்க வைத்தன..
நிலவையும் பூக்களையும்
நேசிக்க வைத்தன..
கவிதைகள் காவியங்கள்
படிக்க வைத்தன..
..புரிகிறதா..
இப்போது..
என் வெற்றிகளில்
..வாழ்க்கையில்
இன்னும் ..
நீ ஒளிந்திருப்பது!