அப்பாவை பார்த்தேன்
அப்பாவை பார்த்தேன்!!!
அப்பாவிடம் சொன்னேன் அன்று
ஆசையாய் காதலித்தேன் அவளை என்று
இன்றோடு முடிந்தது நம் உறவு என்று நமக்குள்
ஈடுபாடு இல்லை என்று சொல்லிவிட்டார் அப்பா அன்று
உறவுகளை எல்லாம் உதறி தள்ளிவிட்டு
ஊரார் போற்ற வாழ விரும்பி
என்னை நான் அறியாமல்
ஏறி வந்தேன் விமானத்தில்
ஐந்து புலனும் அழகாய் நான் பெற்று
ஒரு ஆண்டு கழித்து
ஓரமாய் நான் நின்று
ஔவையை போல் கூனி குறுகி
அப்பாவை பார்த்தேன் இன்று..