காதல் என்றால் உனக்கு கேலி கூத்து


நீயும் நானும் திரைஅரங்கில்

எத்தனை சினிமா காதலை

கைதட்டி ரசித்த போதும்

அதை ஊக்குவித்து

என்னிடம் பேசி வாதாடிய போதும்

காதலை நிச்சயம் உனக்கும் பிடிக்கும்

என நினைத்தேன்

நீயோ ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது

அதுபோல்தான் சினிமா காதலும்

நடைமுறைக்கு உதவாது என்கிறாய்

அப்போது புரிந்து கொண்டேன்

காதல் என்றால் உனக்கு கேலி கூத்து என்று

எழுதியவர் : rudhran (7-Apr-11, 6:07 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 522

மேலே