நிலாப்பெண்ணே

இரவின் அழகே - உனை
இரசிக்கும் இதயங்கள்
நீ காத்திருக்க மட்டுமே
இரட்சிக்கப்பட்டவள் என்று
அறிந்திடக் கூடுமா..?

உதிர்ந்திட்ட காதலினால்
உயிர்விட துணிந்தவள்
உயரத்தை நாடி சென்றாயா..?

உறவுக்கு கட்டுப்பட்டு
அதற்கும் வழியின்றி
அங்கேயே நின்றாயா...?

விளையாட்டு பொருளாகி
பசியாற்றும் பாவையே - உன்
பரிதாப கதை என்னடி...?

படிதாண்ட துணியாமல்
பாவம்செய்ய முடியாமல்
இயலாமையில் சாகும்
இளமைங்கைகளின் நெஞ்சம் கொண்ட
காதல் தந்த பரிசுதானோடி...?

காதல்பாடும் கவிஞர்களின்
கற்பனைக்கு விருந்தாகி
இதம் இதமாய் சுகம் சுகமாய்
இனிக்கின்ற கவிதரும்
கன்னி உந்தன் கலக்கம் என்னடி...?

பாட்டிகதைசொல்லி
பாவை எனை ஏமாற்றாதே
விழிபூக்க காத்திருக்கும்
வேதனை அறிந்தவளிடம் - நீ
விளையாட்டு காட்டாதே...

அடி நிலாப்பெண்ணே
உண்மையில் உன் நிலையென்ன..?

அதை நானும் அறிவேனடி

பாசமெனும் மேகம்சூழ
நட்ச்சத்திர உறவுகளோடு - நீ
நகர்வலம் வந்தாலும்
தனிமைத்தீயில் உந்தன்
இதயம் கதறுவதை
நானும் அறிவேனடி....

என் நிலாப்பெண்ணே - அதை
நானும் அறிவேனடி..!

எழுதியவர் : யாழ்மொழி (27-Nov-14, 12:40 pm)
பார்வை : 125

மேலே