பெண் சுதந்திரம்-----------நிஷா

(மு.குறிப்பு....தோழி பிரியாவின் மாண்டு போன மனிதம் கவிதை ஏற்படுத்திய தாக்கத்தால் நான் படைத்த ஒரு சிறு கவி...பெண் சுதந்திரம் ??????....பிரியா அவர்கள் கவிதையின் படமே இங்கு நானும் இணைத்துள்ளேன்....நன்றி தோழி)
சிதறும் சில
நட்சத்திரங்களை
சீண்டிப்
பார்த்ததுண்டா..?
சுடுகின்ற சூரியனை
ஒருமுறையாவது
தொட்டுப்
பார்த்ததுண்டா...?
சிட்டிகையில்
உப்பெடுத்து
சிரித்து சிரித்து
உண்டதுண்டா..?
சர்க்கரையில்
சாறெடுத்து
அமிர்தம் என்று
அள்ளி குடித்ததுண்டா..?
விழிவடித்த
கண்ணீரை
கண்ணுக்குள் திருப்பி
அனுப்பியதுண்டா..?
வெள்ளைச்சேலை
விதவையை வாசல் நிறுத்தி
வெளியேறி
சென்றதுண்டா.?
சுவாசிக்கும்
காற்றுக்கு
அணைபோட்டு
தடுத்ததுண்டா..?
சுடர்விடும்
மெழுகுவர்த்திக்கு
சுதந்திரமாய்
சாவு உண்டா.?
சீமையிலிருந்து
மாமன் வந்து
ஆடியிலே
மணம் புரிந்ததுண்டா..?
இத்தனையும்
நடக்குமென்றால்....
காத்திரு பெண்ணே
அன்றுதான்
உனக்கும்
விடியல் வரும்....