வரிப்புலிகள் தோற்பதில்லை

கவலை ஏன் நண்பா கொஞ்ச
காலம்நீ பொறுப்பாய் ! ஈழ
அவலங்கள் தீரும் ! தமிழர்
ஆட்சியே மலரும் நாளை .
தவறுகள் மடியும்; ஈனத்
தறுக்கர்கள் தோல்வி காண்பர் .
எவருக்கும் அடிமை இல்லா
ஈழம்தான் கிட்டும் நண்பா !


வெல்வது உறுதி ! தமிழன்
வீணரை வீழ்த்தி வெற்றி
கொள்வது திண்ணம் ! எந்தக்
கொம்பனும் மீள மாட்டான் !
அல்லல்கள் தீர்ந்து நாளை
அலாதியாய் ஈழம் தோன்றும் .
சொல்வதை நம்பு நண்பா
சோதனை சிலகா லந்தான் !


நரி -புலியை வெல்லும் என்றால்
நம்புவதர்க் கில்லை நண்பா !
வரிப்புலிகள் தோற்ப தில்லை ,
வரும்காலம் உண்மை காட்டும்.
உரிமைகள் உடமை சொந்த
உறவுகள் எல்லாம் இழந்து ,
அருமைகள் குலைந்து நிற்கும்
அனைவர்க்கும் விடிவு உண்டு !

---- ----- ------- ----- ------
.

எழுதியவர் : அண்ணாதாசன் (27-Nov-14, 11:40 pm)
பார்வை : 154

மேலே