பாலைவன நிலவு

இறுதி முடிவு
முதல் சந்தித்த
இடத்திலே
தொடங்கிற்று!
இனி சுமப்பது
நினைவுகளைத்தானோ!
_____
தாகம்
தணிக்காத
இரவுகள்
நிலவின் மீதான
-கோபம்
_____
கைகளை
கழுவிய
உறவுகள்
பறவைகளை
நம்பியே
-தனிமரம்
_____
வெட்கத்தில் செங்காந்தள்
அழகை
ரசித்தது
கார்த்திகை
மாதம்
_____
அஞ்சலி செலுத்தும்
தேனீக்கள்
வரிசையாக
வாகனம் மோதிய
வண்ணத்துப்பூச்சிகள்
_____
என் மீதான
இரக்கத்தை
கைவிடு
கைநழுவியபின்
காதலை
நினைத்தே
வாழ்கிறேன்!
_____
உள்ளம்
உறங்கவில்லை
ஊரெல்லையில்
ஓலம்
நாய்கள் ஜாக்கிரதை
_____
அதோபார்
யோக்கியன்
ஆட்காட்டியது
விரல்
மறந்து போன
ஓரெழுத்து
"அ"
_____