காடு விமர்சனம்

இப்பொழுதெல்லாம் என்ன இருக்கப் போகிறது என்று அலட்சியமாக பார்க்கத் துவங்கும் படங்கள் பல என்னைப் பார்த்தா இப்படிக் கேட்கிறாய் என முகத்தில் அறைகிறது...!! அதில் ஒன்று காடு...

ஒரு காடு... அதில் விறகுவெட்டி வாழ்க்கை நடத்தும் கதை நாயகனாக விதார்த்.... நண்பனின் சதியால் சிறைக்குச் செல்ல.. அங்கு போராளி சமுத்திரக்கனியின் சந்திப்பு. அதன் பிறகு துரோகித்த நண்பனின் சதியை முறியடித்து வானத்தையும் வாழும் மக்களையும் காப்பாற்றும் கதை..

படத்தின் முதல்பாதி ஒரு சராசரியான வழக்கமான கதை நகர்வு. விதார்த்தின் வழக்கமான வாழ்க்கை.. அவர் விறகு போடும் சிற்றுண்டிக் கடையின் முதலாளியாக தம்பி ராமையா. அவரின் மகளுக்கும் விதார்த்துக்கும் காதல் என வழக்கம் போலவே நகர்கிறது.... இயக்குனர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனிமேல கதாநாயகிகளை கல்லூரிக்கு அனுப்பி காதலிக்கச் சொல்லுங்கள்... பள்ளிக்கூட காதல் வேண்டாமே... கிராமத்துப் பின்னணியில் சினிமாவை சினிமாவாகப் பார்ப்பதில்லை பதின்வயதினர்...

தம்பி ராமையாவும் சிங்கம்புலியும் நகைச்சுவைக்காக சில இடங்களில்... நல்ல நகைச்சுவைதான் என்றாலும் படத்தின் இரண்டாம் பாதியில் அவர்களைக் காணோம்...

விதார்த்தின் நண்பன்.. அந்த மலை கிராமத்தில் படித்து காட்டு இலாகா அதிகாரியாகவே வேண்டும் என்ற இலட்சியத்தோடு இருப்பவர். இலட்சியம் அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்.. ஒரு கட்டத்தில் சந்தன மரங்கள் கடத்த .. அதின் பழியை விதார்த் மேல் போட்டு தப்பித்து தான் நினைத்ததை குறுக்குவழியில் சாதிக்கிறார்.. அதன் பின் தன சொந்த கிராம மக்களையே அவர் தந்து சுயநலத்திற்காக வெளியேற்றுகிறார்..

இதனிடையில்.. விதார்த் சிறையில் சமுத்திரக்கனியுடனான சந்திப்பு.. இங்குதான் படம் நிமிர்கிறது. அவர் பேசும் வசனங்களுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்..

" போராட்டம்னு வந்துட்டா ஒண்ணு வெற்றி .. இல்லைன்னா தோல்வி... சமாதானமா போற எந்த கூட்டத்துக்கும் இங்க மரணம் தான் பரிசு.."

"பல்லுயிர்க்காடுன்னா எல்லா உயிரினங்கள் கூட சேர்ந்து புலிகள் வாழ்வது.. நாம பாதி புலிகளை கொன்னுட்டோம்.. மீதியை கூண்டில் அடைச்சிவச்சி பாத்துட்டு இருக்கோம்.. இன்னும் பல்லுயிர்க்காடுன்னு சொல்லிக்கிட்டு திரியிறோம்./. "

எங்க வாழ்க்கைக்காக காட்டை பயன்படுத்துறதுண்டு.. ஆனா நாங்க வசதியா வாழ்றதுக்காக ஒரு செடியக்கூட புடுங்கமாட்டோம் "

காடு வளக்குறோம்ன்னு சொல்லி வெறும் தைல மரத்தையும் தேக்கு மரத்தையும் தான வளத்து வச்சிருக்கீங்க.. காட்ட எங்ககிட்ட குடுத்துருங்க சார்.. நாங்க வளத்துக்குறோம்.."

இந்த மாதிரியான நல்ல வசனங்கள்... படத்தின் சில கதா பாத்திரங்கள் படம் முழுவதும் தொடர்ந்து வராமல் பாதியிலேயே பிய்த்துக்கொள்வது படத்தின் சிறு சறுக்கல்.. உதாரணமாக அந்த திக்கிவாய் மரம் வெட்டுபவர்.. மகனை கொலைக்கு பறிகொடுத்தவர்... அந்த சிறுபெண்.. இந்த மாதிரி...

கொஞ்ச நேரம் சே வும் படத்தில் புத்தகமாக வசனங்களாக நடித்திருக்கிறார். இதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்... !!

எழுதியவர் : நல்லை சரவணா (28-Nov-14, 10:47 pm)
Tanglish : kaadu vimarsanam
பார்வை : 368

மேலே