கவிதையின் மோட்சம்

கவிதை வேண்டுகிறேன் உன்னிடம்,
கவிதையின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற.

கவிதை வேண்டுமென்றே தோற்கிறது உன்னிடம்
நீ மீண்டும் புனைய விளையும்
தனிமை கொஞ்சல்களை ரசிப்பதற்காக.

இயற்றிவிடாதே ஒன்றேனும் நன்றாய்
கவிதை தன் வாழ்நாள் முடிக்கும் - மோட்சம் அடைந்ததால்.

உன் கவிதை முயற்சிக்கு நரபலி நகங்களா?
இல்லை இல்லை
அது நகங்கள் அடையும் பலநாள் தவப்பலன்.

நீ கண்களால் வருடும் வரிகள் அனைத்தும்
நீர்த்துளி பெற்ற மொட்டுக்கள் போல் சிலிர்க்கின்றன.

நீ மறுபடி உன் உள்ளங்கை பட கிழித்தெறிய வேண்டுமென்றே
கவிதை காகித ஒப்பந்தம் நடக்கிறது - உனக்குத் தெரியாமல்.

நீ மனமுடையலாகாது கவிதையும் - தன்
ஆசை சுருக்கி படைப்பாகிறது - உன் கையில் - (உன் கவிதையில்)
நீ எழுதத் துடிக்கும் பாக்கியசாளியை காணும் அவாவில்.

உன் கையில் தவழ்ந்து என்னை அடைந்ததும் கவிதை கேட்ட முதல் வரி

சத்தியம் செய்.. உன் அடுத்த பிறவி எனக்கென்று.... - கவிதை
அட முட்டாள் கவிதையே முன்ஜென்மத்தில் நானும் அவனுக்காய் எழுதப்பட்ட ஓர் கவிதையே... - நான்

இன்று உன்போல்....

எழுதியவர் : ஜெ நாகபாண்டி (28-Nov-14, 10:58 pm)
சேர்த்தது : ஜெ. நாகபாண்டி
பார்வை : 77

மேலே