பாரதி என் காதலன்

உன்னை நினைக்கையிலே இந்த
உலகம் மறக்குதட

உன் பெயர் சொல்கையிலே
உள்ளே தீயொன்று எரியுதட

உன் கண்களை தான் கண்டால்
நெஞ்சில் காதல் பிறக்குதடா

உன்னை எந்தன் உள்ளே வைத்தேன் -அதனால்
நானும் கவிஞனடா



கவிதையில் என்
உயிர் வளர்த்தாய்

அதன் ஆழத்தில்
காதல் தந்தாய்

உலகினை ரசித்திடவே
புது இதயம் தான்
நீ கொடுத்தாய்

குருவிகள் தோழனென்றாய்
என் குருதியில் கலந்து போனாய்

குன்றுகள் குழந்தைஎன்றாய்
உன் குரலினில் தொலைந்திடும்
அந்த குவளையாய் ஆக்கிவிட்டாய்


(உன்னை நினைக்கையிலே)
காசியில் நீ நீயானாய்
உன் கவிதையில் நான் நீ ஆனேன்

பெண்ணடிமை வன்கொடுமை பேசி பேசி
எனை உன் அடிமை ஆக்கிவிட்டாய்

பராசக்தி இன்று
பாரதி ஆனாளடா

என் பராசக்தி நீயடா ...........

(உன்னை நினைக்கையிலே)

எழுதியவர் : (29-Nov-14, 2:56 pm)
பார்வை : 85

மேலே