பிறழ்ந்து தடுமாறாதே மனமே
நான் தேடும் பொருள்
இங்கில்லை..நீ
தேடும் பொருளும்
இங்கில்லை...
பொருளுக்கு பொருள்
தெரியாத இந்த
தேடலினால் முற்றுப்
பெறாமல் முடிவு
தெரியாமல் என்றும்
தொடர்கிறது
தொடர்கதையாய்...
நம் கதை இங்கு....
தேடலில் தொலைந்தேன்
என்னை நானே
தொலைத்தேன்....
கிடைக்கும் வழி
அறியேன் .. பிழை
செய்த காரணம்
என்னென்று அறியேனே
பிரிதொரு நிலை
பிறழ்ந்து தடுமாறாதே
மனமே....