ஒற்றப் பார்வையால்
முத்தான மூன்று வார்த்தையை
முழுங்கப்பாக்கிறேன்
முட்டக்கண் அழகிலே
மூழ்கிப் போயிடு
முயற்சி செய் -என்
முடிவில்லா பார்வையில்
முடங்கி போவதை தடுத்து நிறுத்த -அல்ல
முகவரி மாறிவிடும் உன் மனதில் என் பெயராக
முரசும் முழங்கிடும் உன் மனதில் என் ஆசைகளாக
முத்தமிழும் மறந்து போக
முழு நிலவாய் முளித்துக் கிடப்பாய் தூக்கத்தை மறந்து
முன்னால் என் விம்பம் தோன்ற
முதலில் பேச்சும் மூச்சாய் மாறிவிட
முக்கனியும் சுவை இன்றி மூக்கின் நுனி தேட
முல்லைநிலம் போல் காத்துக் எனக்காய் கிடக்க
முயலைப போல தாவித் திரிவாய் முச்சந்தியில்
முத்தங்கள் எல்லாம் சொத்துக்களாக சேகரிப்பாய்
முப்பொழுதும் என் சிந்தனைதான்
முடிவைச் சொல்லிவிடு -என்
முட்டக்கண்ணில்
முடிச்சுப்போல் என் விழியில்
முகர்ந்து விட