ஒரு தாலியும், ஒரு தோல்வியும்

ஒவ்வொரு திருமணத்திலேயும்
ஏதோ ஒரு இதயம் உடைக்கபடதான் செய்கிறது !!

ஒரு பெண் சிரிக்க
ஒருத்தி கண்ணீர் சிந்தத்தான் செய்கிறாள்
ஒரு பெண் கனவுகளை சுமக்க
ஒருத்தி கனவுகளை காற்றில் கரைக்கிறாள்
ஒரு பெண் திருமதியாக
ஒருத்தி விவாகமே பொய் என்கிறாள்
ஒரு பெண் மருமகளாக
ஒருத்தி மகளாகவே இருந்துவிட தீர்மானிக்கிறாள்
ஒரு பெண் வாழ்வை துவங்க
ஒருத்தி அதை முடித்து கொள்ள துணிகிறாள்
ஒரு பெண் எதையும் அறியாது வாழ்ந்து கொண்டிருக்க
ஒருத்தி எல்லாம் அறிந்தும் புது வாழ்வை கைகொள்ள யோசிக்கிறாள்

இருப்பக்கதின் கதாநாயகனோ
தூசி படிந்த பரணின் மூலையில் புத்தகத்தை எரிந்து விட்டு
தான் கதாநாயகனாகவே வாழ்ந்து தான் கொண்டிருக்கிறான்
புதிய நாயகியோடு !!

நாடக மேடையன்றோ இவ்வாழ்வு
ஒரு தாலியிலும், ஒரு தோல்வியிலும்
ஒரு கதையின் அரங்கேற்றம்!!

எழுதியவர் : சௌந்தர்யா (1-Dec-14, 12:25 am)
பார்வை : 138

மேலே