தாய்நிலம்
விமானத்திலேறி கனடியனாகி
செல்வந்தனாகியதும் எப்படி
மறந்தாய் தாய்நிலத்தை?
தலைவாழை இலை போட்டு
இலைநிறைய உணவிட்டு
ருசித்த அன்பினை உன்னிதயம்
உணர்த்த மறுத்தது ஏனோ?
நீச்சல் கற்றுக்கொடுத்த கிணறும்.
ஊஞ்சல் ஆடிய புளிய மரமும்.
திருடி சாப்பிட தேங்காயும் இளநீரும்.
பங்குபோட்டு உண்ட நண்பர்களும்
கூவி எழுப்பும் கோழியின் குரலும்.
ஒத்தையடி பாதையெல்லாம் ஓரங்கட்டி
உதிர்ந்துவிட்ட பூக்களின் வாசனையும்.
இவையனைத்தும் உன் வாழ்வில்
நீ விட்டு போன உன் நினைவுகள்
நீ எப்படி மறந்தாய் உன் தாய்நிலத்தை?