என் முதல் காதல்

நானும் அவனும்
சித்திர பாட வகுப்பில்
இருவருக்கும் சிறு வித்தியாசம்

அவன் படிப்பிக்கிறான்
நான் படிக்கிறேன்
அவன் ஆசிரியன்
நான் மாணவி
அவனுக்கு இருபத்திரண்டு
எனக்கு பத்தொன்பது

எனக்குள் முளைத்தது
பொல்லாத காதல்
முதல் காதல் ,தவறான காதல்

செடியாய் இருப்பதை
கொடியாய் படர்வதற்கு முன்
அடியோடு அழிக்க முனைந்தேன்
முடியவில்லை

செடியாய் இருந்தாலும்
காதல் பலமானது
அவன் முகம் காணும் ஒவ்வொரு
நாளும் காதல் ஆணிவேர்
விடுவதை உணர்ந்தேன்

உணர்ந்த முதல் சித்திர
பாட வகுப்பையே தவிர்த்தேன்
அவன் முகம் காணா
முதல் நாள் நரக வேதனையாயிற்று

எனினும் காதலை விட்டு
தப்பி ஓடியதில் மனதிற்கு
மகிழ்ச்சி

நாட்கள் நகர்ந்தது
அவனை மறக்க முடியாவிடினும்
அவனை விட்டு விலக முடிந்தது

வருடமும் வந்தது
என்னை பெண் பார்க்கவும் வந்தனர்
வந்தவன் என் முதல் காதல்
இன்ப அதிர்ச்சியில் நான் நின்றிருக்க
அவன் மெல்ல என் காதில்

"உன்னை கண்ட நாள் முதல் காதல்
தப்பித்து ஓட முனைந்தேன்
எனக்கு முன் நீ ஓடிவிட்டாய்
மகிழ்ந்தேன் ,பின் தவித்தேன்
விதியோ என்னை உன்னிடம்
விட்டது .என்னை திருமணம்
செய்ய விருப்பமா "
அவன் என்னிடம் கேட்கிறான்

பைத்தியக்காரா ! என் முதல்
காதல் நீ தானே

எழுதியவர் : fasrina (2-Dec-14, 11:42 am)
Tanglish : en muthal kaadhal
பார்வை : 87

மேலே