உன் சம்மதம் தருவாயா
என் தேவதையே
உன் நிழலருகே
ஒரு கவிதையென
நான் ஒரு முறை வாழ்ந்திட
உன் சம்மதம் தருவாயா
ஒரு கடிதம் வரைந்து
உன்னிடம் கொடுத்து
கால்கடுக்க காத்திருந்தால்
உன் சம்மதம் தருவாயா
உறங்குகையில் உன் பெயர்
உளறி உன் நினைவாலே
நான் பைத்தியமாகி
நீ வரும் வழியில் நின்றால்
உன் சம்மதம் தருவாயா