இப்படியே நாட்கள் நீளுதே - நாகூர் கவி

விரல்கள் தழுவ
இதழ்கள் உலவ
இன்னிசை பாடும் புல்லாங்குழல்....

மூங்கிலின்
கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த தாகம்...

முணுமுணுத்தவாறே
பிறப்பெடுக்கிறது
புல்லாங்குழலில் காதல் ராகம்...

காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?

எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......

இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...

இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...

அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....

நான் காதல்
வழி கேட்டு வந்தால்
நீ வலி கூட்டி செல்வாய்...

அன்று நீ
என்னுள்
தந்த வலிகள்...

இன்று
காதல் கவிதைகள்
புறப்படும் வழிகள்....

இதை மொழியவே
உன் பாதையின்
வழியே வந்தேன்...

இக்காதல் மழலையோ
உன்னிடம் பதிலில்லாமல்
தனியே நொந்தேன்....!

எழுதியவர் : நாகூர் கவி (3-Dec-14, 12:14 am)
பார்வை : 460

மேலே