காதலை நேசிப்போம் - நாகூர் கவி

சுவாசத்தை பார்க்க
காற்று அனுமதி கேட்பதில்லை...

கரையினை தொட
அலைகள் அனுமதி கேட்பதில்லை...

இதழினை தழுவ
புல்லாங்குழல் அனுமதி கேட்பதில்லை...

வீணையை இசைக்க
விரல்கள் அனுமதி கேட்பதில்லை...

ஒளியினை பெற
விழிகள் அனுமதி கேட்பதில்லை...

உடலினை தழுவ
உயிர்கள் அனுமதி கேட்பதில்லை...

இப்படி உலகமே
காதலில் சுழலுகிறது....

இதை அறியாமல்
உன்மனம் உளறுகிறது....

இனியும் போடாதே
காதலுக்கு தடா...

வீணே ஆகாதே
நீயும் பலிகடா......!

எழுதியவர் : நாகூர் கவி (2-Dec-14, 11:19 pm)
பார்வை : 351

மேலே