மீண்டும் வாராதோ
உறவாடும்
பொழுதுகள்
விடியாமல்
அமிலாதோ ?
மர தழும்பில்
சருகுகள் மீண்டும்
முளையாதோ ?
மறந்த சப்தங்கள்
கீதமாய்
ஒலிக்காதோ ?
நாணம் கொண்ட பெண்மை
மொழி திறவா தேசம்
பனி அமர்ந்த புல்வெளி
கையேந்தா கூட்டம்
காலம் கடக்கா பருவநிலை
தேவை வேண்டா மனிதன்
மீண்டும் இவ்வுலகில்
வாராதோ ?????????????