என் பார்வையில் பெண்கள்
அதிகாலையில்
எழுந்தபுள்ள...
அரிசிமாவில்
கோலம்தீட்டி
கண்டாங்கிச்
சேலைகட்டி
கைநிறையக்
கொசுவம்வச்சு
நெற்றி நடுவே
வகிடெடுத்து
புருவம் நடுவே சாந்துப்
பொட்டு வைத்து
கையில்
குடமெடுத்து
கண்மாய்க்
கரையோரம்
வந்தாள்....
வட்டமிடும்
வல்லூறுவைப் போல்
இளவட்டமெல்லாம்
சுற்றிவருவர்.....