காதல்

சோகக்கதைகள் சிலமட்டும்
சொக்கட்டானில் சுட்டெரித்து
சிதறிய சாம்பலை
செம்மனத்தின் செஞ்சாயத்துள்
சிறிதுவிட்டு,
பேனா
வெட்கி சிந்தும் வார்த்தை
ஒவ்வொன்றுக்கும் சிவப்பிட்டேன்
காதல் மடல்முழுதும்
அவள் வெட்கத்திற்கு
உவமைகளாய்ப் போக

'பென்சில் காதல்கள்' எல்லாம்
பள்ளிப் பருவத்துடன்
படிப்பை நிறுத்திக்கொள்ள..
முதல் முதலாய்
பதவிஉயர்வு பெற்ற
'பேனா காதலை'
கல்லூரியில்
காலெண்டர் சீட்டை
கிழிக்க மனம் வராத
ஓர் கனாநாளில்
காணப்பெற்றேன்...

ஆம்..!

ஓர் UNIBIC பிஸ்கட் துண்டு
என் மனத்தை
பிடுங்கித் தின்றது
தன் காதல் பசிக்கு
என்னையே இரையாக..!

பள்ளிநாட்களில்
"புடிச்சுருக்கு" என்பதற்கு
பூச்சூடி பொட்டு வைத்து
"I LOVE YOU" என்று மட்டுமே
மொழிமாற்றம்
செய்யத் தெரிந்த
கிறுக்குமனம்
அன்று தான்
காதலின் அர்த்தத்தை
'OXFORD Dictionary' குள்
அலச ஆரம்பித்தது...

புரிய முயன்று
தோற்ற
கேள்விகள் பல
என் வாழ்கை பெட்டகத்துள்
வயதுக்கு வந்ததை
விழிநீர்கொண்டு விழாவெடுத்தேன்...

தோல்விகளும் கேள்விகளில் பேசியது...

"பேசிப் பழகிப் புரிந்து கொள்தல் காதல்"
எனச் சொன்னவன் நாவிற்குள்
நரம்புகள் சில
நசுங்க பட்டிருக்கலாம்...
புரிவதுதான் காதல்...
ஆனால்
பேச தடுமாறும்
பேதை மனிதன்
காதல் பந்தியில்
பாகற்காயாய் பரிமாறப்
படுவதேன்...?"

"காதலியின் கண்சிமிட்டளுக்கு
காலத்தைக் கடன்வாங்கி
காத்திருக்கும் நேரம் தரும்
உணர்வுகளை
புரிந்து கொள்ளும்
பக்குவம் படைத்தவன்
காலாவதி கவிஞனாய்
மரிப்பதேன்...?"

"எதிரே வாழ்கிற
'Phosphorus' காதல்கள்
பலவும்
கற்பூரத்தின் கடைசி வாரிசாய்
கடற்மணலுக்குள்
கால் நனைத்தாட,
மறுகளுக்குள் மரணிக்கும்
மனம் பெற்றோன் மட்டும்
நினைவுபுதைக்குழியில்
உயிரிழப்பதேன்...?"

கேள்விகள் எல்லாம்
குற்றுயிரை குலையறுக்க
"புரியாத மொழியில்
காதல் வாசிக்க முயல்கிறேனோ?"
எனும் ஐயம்
அவ்வப்போது
என் தலையில்
குட்டுவைக்க தவறியதில்லை...

'ரோம' 'Ceasar' கள் மேல்
காதல் கொள்ளும்
'Cleopatra' க்கள் பலர்
'ரோம' சிறுகுரங்குகளை
காதலில் கணக்கெடுப்பதில்லை...

யார்கண்டது?
துகிலுரித்தால் தெரியலாம்

சிறு குரங்குகளுக்குள்ளும் சில
'Ceasar' வணங்கும்
'Ceres' கள் வாழ்வதை...

நான் 'Ceasar' உம் இல்லை...
எனினுமிச் சிறுகுரங்கும்
தன் மனமதகில்
உன் மனவயல் பாசனத்திற்கு
காதல்நீரை தேக்கிவைக்கிறது
என்றேனும் உன் மன பயிர்க்கு
தன்விவசாயம் தேவைப்படும்
எனும் நம்பிக்கையுடன்...-JK

எழுதியவர் : (3-Dec-14, 6:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே