வேலைக்கு அல்ல

பற பற என ஒழும்பி
எதோ நினைப்பில்
தலையை சுவரில் முட்டி
அறக்கப் பறக்க வெளிக்கிட்டு
தட்டு தடுமாறி
பொருட்களை கீழே விழுத்தி
அம்மாவிடமும் திட்டுவாங்கி
செருப்பை வழம் மாறி அணிந்து
அதனை சரிப்படுத்தி
தலையை கைகளால் மெல்ல வருடி விட்டு
வெகுவான பொடிநடையில்
நடந்து போகிறாள்
வேலைக்கு அல்ல-தன்
வேந்தனிடம் ...