பகல் நிலவு - 2
![](https://eluthu.com/images/loading.gif)
தூய வெண் மதியே
துள்ளும் விண் மீனிடையே
மாயக் கோலம் மாந்தர்
மதி மயங்கியே கவிதை
வேய உளம் மகிழந்து
தூது பல சென்றாயோ
தாதி காதல் வளர்க்க...
இரவு பல்லக்கில் ஒர்
இளித்த வாயன் நீயென
பலர் பறித்து காதல்
பரிசு தந்ததால் போதும்
இனித் தொல்லை தாங்காது
இரவில் நீ தூங்காது
பகலில் பாய் விரித்தாயோ.....?