சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 15 கொலு வமரெகதா கோதண்ட - ராகம் தோடி
பல்லவி:
கொலு வமரெகதா கோதண்டபாணி (கொ)
அனுபல்லவி:
நலுவகு பலுகுலசெலியகு ருக்மிணிகி
லலிதகு ஸீதகு லக்ஷ்மணுநி கருதைந (கொ)
சரணம்:
1.வேகுவஜாமுந வெலயுசு தம்புர
ஜேகொநி குணமுல ஜெலுவொந்த பாடுசு
ஸ்ரீ கருநிகி ச்ரித சிந்தாமணிகிநி
ஆகலி தீர பாலாரகிம்பநு ஜேஸே (கொ)
2. விநவய்ய ஸரிபொத்துவேள நாது நிகி
சநுவுந பந்நீட ஸ்நாநமு காவிஞ்சி
க நுநிகி திவ்ய போ ஜநமுநு பெட்டி கம் –
மநி விடெ மொஸங்குசு மறவக ஸெவிஞ்சே (கொ)
3.பா கவதுலு கூடி பாகுக க நநய
ராகமுலசே தீ பாராத ந மொநரிஞ்சி
வேகமெ ஸ்ரீஹரி விருலபை பவளிஞ்சி
ஜோகொடடி த்யாகராஜூ ஸுமூகு நி லேபே (கொ)
பொருளுரை:
கொலுவிருக்கை என் கோதண்டபாணிக்கு அமைந்ததல்லவா?
பிரமனுக்கும், ஸரஸ்வதிக்கும், ருக்மிணிக்கும், லலிதைக்கும், ஸீதைக்கும், லக்ஷ்மணனுக்கும் கிடைத்தற்கரிய கொலுவிருக்கை என் கோதண்டபாணிக்கு அமைந்ததல்லவா?
அதிகாலையில் தம்புராவை கையில் ஏந்தி அவனுடைய திவ்ய குணங்களை அழகாக ஸங்கீர்த்தனம் செய்து, லக்ஷ்மீகரனும் சரணடைந்தவர்களுக்கு சிந்தாமணியுமாகிய அவனுக்குப் பசி தீர பால் அமுது செய்விக்கும் (கொலு அமைந்ததல்லவா?)
பொழுது விடிந்ததும் பெருமானுக்குப் பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து, திவ்யமான போஜன வகைகளை அமுது செய்வித்து, வாசனை மிகுந்த தாம்பூலம் அளித்து மறவாமல் சேவிக்கும் (கொலு அமைந்ததல்லவா?)
அடியார்கள் ஒன்று கூடி கன, நய ராகங்களில் இசைபாடி தீபாராதனம் செய்த பின்னர் ஸ்ரீ ஹரியை மலர்ப் படுக்கையின் மீது பள்ளி கொள்ளச் செய்து தியாகராஜன் அந்த ஸுமுகனைத் திருப்பள்ளியெழுச்சி பாடிஎழுப்பும் (கொலு அமைந்ததல்லவா?)
குறிப்பு:
1. Somu- Lalgudi- Sivaraman- Shyamsundar- Koluvamaragada Thodi என்று Google search ல் தேடினால் you tube ல் பாடலை மதுரை சோமசுந்தரம் அவர்கள் விரிவாக, 1 மணி நேரம் அருமையாகப் பாடுகிறார். கேட்டு ரசிக்கலாம்.
2. Koluva Maragatha - KJ Yesudas - Thodi - Adhi - Thyagaraja என்று Google search ல் தேடினால் you tube ல் பாடலை ஜேசுதாஸ் விரிவாக, 20 நிமிடம் அருமையாகப் பாடுகிறார். கேட்டு ரசிக்கலாம்.