எது தீட்டு -வித்யா
எது தீட்டு......???-வித்யா
இது எனக்கும் கருத்துரிமை உண்டு எனும் நோக்கத்தில் என் கருத்துக்களை எந்த பயமும் சங்கடம் இல்லாமல் பதிகிறேன். இது எந்த மதத்தையோ, பெண்களையோ, நம் சாஸ்திரங்களையோ புண்படுத்துவது அல்ல. உணர்வுகளின் புலம்பல் அவ்வளவே.
தொட்டால் தீட்டு பட்டால் குற்றம் என்பது அந்த மூன்று நாட்களின் அடையாளச்சின்னம் இந்த காலத்திலும் இருக்கிறது என்பதுதான் வேடிக்கை. எச்சில்....உமிழ்நீர்...ரத்தம்......மலம்.....ஜலம் .......போல......இதுவும் நம் உடலில் உற்பத்தியாகும் ஒரு திரவமே.
இதற்கு எதுக்கு இவ்வளவு அலப்பரை என்றுதான் புரிவதில்லை.. திருமணநாளன்று மாதவிடாய்க் காலம் வந்ததால் அப்பெண் ராசியில்லாதவளாகிவிடுகிறாள்...... அது தெய்வக் குற்றமாகிவிடுகிறது. நல்ல நாட்கள் முக்கிய விரத தினங்களில் நேர்ந்தால் ஏதோ முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலன் அனுபவிப்பது போன்றதொரு மாயை உருவாக்குவது....!
ஏதோ தீர்க்க முடியா நோய் வந்தது போல வீட்டின் ஒதுக்கு புறத்தில் பிச்சைக்காரி போல பாயும், தலையணையும், தட்டும் கையில் கொடுத்து தனிமை படுத்துவது இன்றும் கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு இந்த அளப்பரையிலே தெரிந்து விடும். அது அப்பெண்ணுக்கு தர்மசங்கடமாக இராதா......?? இம்மாதிரி நாட்களில் அவர்கள் சக்தி குறைந்து சோம்பலாகக் காணப்படுவர். அதையும் இதையும் சொல்லி சங்கடப் படுத்தாமல் ஆரோக்கியமான உணவுகள் கொடுத்து பராமரிக்கப் பாருங்கள்.
இப்போது 99% பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை இருக்கிறது. இது இப்போதெல்லாம் உடல் சம்பந்தப் பட்டது என்பது போய் உணர்வு சம்பந்தப்பட்டதாகிவிட்டது. பெருமளவில் படபடப்பு....... பயம்....... உறக்கம் குறைதல்....... இது எல்லாவற்றிற்கும் மேலாக தவிர்க்க முடியா வலி.......!
சிறு ஆறுதல்.... இதமாகப் பேசுதல் மென்மையான சூழலை உருவாக்கிக் கொடுத்தல் அவர்களுக்கு முக்கியம். அன்பிற்கு உரியவர்களின் நலம் பேனலில் தான் ஜடப்போருட்களில் இருந்து வேறுபடுகிறோம். திருந்துங்கள்......... திருத்துங்கள்......!!