இட ஒதுக்கீடு சட்டத்தை குறை கூறும் நண்பர்களுக்கு - கோபி சேகுவேரா

இணையதளத்தில் இட ஒதிக்கீடு பற்றிய நிறைய விவாதங்கள் நடக்கின்றன, அதில் பெரும்பாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே முதன்மை குரலாக ஒலிக்கின்றன. பொருளாதாரம் மற்றும் திறமையை முதன்மையாக கொண்டே இட ஒதிக்கீடு அமைய வேண்டும், சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம், தலித் மக்களும் பொருளாதாரத்தில் நன்றாக தான் உள்ளனர் அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று பல பல கோணங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற எண்ணம் மட்டுமே கேட்கிறது.

சாதிய வன்கொடுமை பற்றி இந்த தலைமுறைகள் அறிய வாய்பில்லை என்பதே உண்மை. உங்களது தாத்தா, பாட்டியிடம் இந்த கேள்விகளை கேட்டுப்பாருங்கள்
பிறப்பால் இழி பிறப்பு என்று சொல்லப்படும் மக்கள் யார்?
தீண்டத்தகாத மக்கள் யார்?
டீக்கடையில் கொட்டாங்குச்சியில் டீ குடித்த மக்கள் யார்?
மேல் சட்டை, செருப்பு அணிய அனுமதியில்லாத மக்கள் யார்?
இன்னும் எத்தனையோ கொடுமைகளை தாங்கிய மக்கள் யார்?
வாழும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாய் வாழ்ந்த மக்கள் யார்?
அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில் தலித்துகள் தான்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் கடந்த 1968-இல் 44 தலித் விவசாயிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்..??

பீகார் மாநிலம் பதானிதோவா என்ற இடத்தில் 1996-இல் 21 தலித்துகளை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்..??

திருச்சி மாவட்டம் திண்ணியம் கிரமத்தில் கடந்த 2002-இல் தலித் ஒருவரின் வாயில் மலத்தை திணித்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்..??

இந்த சம்பவத்திற்கு எல்லாம் முதன்மை காரணம் சாதி தான். சக மனிதனை பிறப்பால் தாழ்ந்தவன், திண்டதகாதவன் என்று சொல்வதை விட கொடுமை வேறெதுவாது உண்டா..??

நம் முப்பாட்டன், நம் பாட்டன், நம் தாத்தா பாட்டி சேமித்த செல்வங்களும், பொருள்களும் நமக்கு சொந்தமென்றால், அவர்கள் தலித்துகளுக்கு செய்த கொடுமைகளும், பாவங்களும் நமக்கு சொந்தமில்லையா..??
அந்த பாவங்களுக்கு நாம் எப்படி அவர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறோம்..??

கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளாய் அவர்களின் வாழ்வாதாரத்தையும், முன்னேற்றத்தையும் சீர்குலைந்து வாழவிடாமல் அடிமைகளாய் பிழைக்கவிட்டோம். சாதிய வன்கொடுமையால் பள்ளிக்கூடம் கூட செல்லாதிருந்த தலித் குழந்தைகள், இப்போது தான் நமுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட அனுமதிக்கின்றோம். அதற்குள் அவர்வளுக்கு கொடுக்கப்படும் உரிமைகளை பறிக்க வேண்டும் என்று கொடி புடிக்கின்றோம். என்ன நியாயம் இது?

தலித்துகளின் முன்னேற்றத்திற்காக மற்றவர்களை சாக சொல்லவில்லை. அவர்கள் வாழ்வதற்கு வழி விடுங்கள், அவர்கள் ஒரு தலைமுறையாவது தலை நிமிர்ந்து வாழட்டும். அவர்களுக்கு இப்போது தான் எழுந்து நிற்கின்ற திறன் வளர்ந்திருக்கிறது உங்கள் தோள் கொடுங்கள் அவர்களும் உச்சத்தை அடைந்து உலகத்தை பார்க்கட்டும். அவர்கள் ஏறும்போது உங்களுக்கு சிராய்ப்புகள் விழத்தான் செய்யும் அதை பொருத்து கொள்ளுங்கள். அந்த மன பக்குவம் வளர்த்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தையத்தில் நம்முடன் ஓடுவோர் எத்தனை பேருக்கு உங்களுடைய உடல் திறன் இருக்கிறது. அதில் சில மாற்றுத்திறனாளிகளும் ஓடிவர வேண்டியுள்ளது, சில பேர் உங்களை விட 200 மீட்டர் பின்னாடி இருந்த ஓட்டப்பந்தை தொடங்கவிருக்கிறது, எல்லாருடைய இலக்கு வெற்றி தான் ஆனா நல்ல உடல் திறன் கொண்ட நீங்க உங்கள விட பின்னாடி இருந்து போட்டி தொடங்குறவங்க கூடவும், மாற்றுதிறனாளிகள் கூடவும் போட்டி போடுறது சரியா..?? இது ஒரு உண்மையான மனிதனுக்கு அழகா..??

சாதிக் கொடுமைகளால் உயிர் விட்ட மக்களின் எண்ணப்படி, புரட்சியாளர் அம்பேத்கார் எண்ணப்படி, தந்தை பெரியாரின் எண்ணப்படி என்றைக்கு சாதிகள் அழிந்து மக்கள் அனைவரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒன்றுமையுடன் வாழ்ந்து சாகும் போதும் தனித்தனி சுடுகாடில்லாமல் சவமத்துவமாய் இச்சமுகம் மாறுதோ, அன்றைக்கு வேண்டுமானால் இந்த இட ஒதிக்கீடு பற்றி பேசுவோம் அதுவரைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதிக்கீடு கண்டிப்பாக வேண்டும் வேண்டும் வேண்டும்...

குறிப்பு : என் மனதிற்கு பட்டதை நான் சொல்லிவிட்டேன், யாரையாவது பாதிக்கும்படி இது அமைந்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

எழுதியவர் : கோபி சேகுவேரா (6-Dec-14, 3:24 am)
பார்வை : 858

மேலே