இறைவனுக்கு மிக அருகில் இருப்பவள்

இயற்கையாய்
அன்பை
பொழிபவள் ...

இதயத்துள்
இசையாய்
சிலிர்ப்பவள் ...

உண்மையின்
பொருளாய்
மிளிர்பவள் ...

உறவுக்கு
உயிர்ப்பு
தருபவள் ...

கண்...வழி
கவிதையாய்
நுழைபவள்...

புது ...மொழி
மௌனமாய்
உரைப்பவள் ...

புதுமலராய்
தினமும்
மலர்பவள் ...

புது ரத்தம்
உடலுக்கு
தருபவள் ...

கனவிலும்
நிழலாய்
தொடர்பவள் ...

கவலைகள்
எல்லாம்
களைபவள்...

விழிகளில்
விசயங்கள்
சொல்பவள் ...

மொழிகளில்
தமிழாய்
இனிப்பவள் ...

கள்ளமில்லா
குழந்தையாய்
சிரிப்பவள் ...

உள்ளமில்லா
மனிதரை
வெறுப்பவள் ...

தென்றலாய்
தேகம்
தொடுபவள் ...

கோபத்தில்
தீயையும்
சுடுபவள் ...

நீராய்
தாகம்
தணிப்பவள்...

நீள்வானாய்
மனதால்
பறந்தவள் ...

நிலத்திற்கும்
பொறுமைகற்று
தருபவள் ...

நிசங்களின்
நிழலாய்
இருப்பவள் ...

வண்ணங்களில்
இயற்கையாய்
மிளிர்பவள்...

எண்ணங்களின்
செயல்களாய்
அமைபவள் ...

முதுமையின்
சுமைகளை
சுமப்பவள் ...

முற்பிறவியின்
பலனாய்
கிடைத்தவள் ...

அவள் ...

இறைவனுக்கு
மிக அருகில்
இருப்பவள் ...

இல்லறத்
துணையாய்
வந்தவள் ..

-------------------------------------------------------------
அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-Dec-14, 12:14 pm)
பார்வை : 1928

மேலே