மனிதமும் மனிதனும்
ஆதியில் ஆதாம் முதல் மனிதன்
அவன் வழி வந்த நாம் ஆதாமின்
சந்ததியினர் ஆனோம் அன்று
மனிதன் பாவ புண்ணியம் நல்லது கெட்டது
அறியாமல் வாழ்ந்த காலம்
மனிதனை முட்டாளாக்கியது
அன்று மனிதனும் ஒரு மிருகம் போல்
எதையும் உணரும் திராணி அற்றவனாக வாழ்ந்தான்
காலபோக்கில் மனிதன் தன்னைத் தானே
உணரக் கற்றுக் கொண்டான்
ஆராயும் திறன் அவனிடம் குடிகொண்டது
முற்போக்கு சிந்தனை உள்ளவனாக
வளரத் தொடங்கினான்.
மனிதன் முழு மனிதனாக வாழத் தொடங்கி
பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன
இன்று இப்பொழுது அனைத்தும் அறிந்த
மக்களாக நாம் வாழ்கின்றோம்
ஆனாலும் இன்னும் மனிதம் மனிதனிடம்
மழுங்கியே காணப் படுகிறது
மனிதம் முழுமையாக மனிதனிடம்
தென் படும் போது தான்
மனிதனும் படைப்பின் பயனை உணர்ந்திடுவான்
உணர்ந்தும் வாழ்ந்திடுவான் ,
அப்போது உலகில் அமைதியும் சமாதானமும்
நிறைந்து விளங்கும் நல்லதோர் உலகத்தை
நாம் காண்போம் அடுத்துவரும் நம் சந்ததிக்கு
அனுபவித்து வாழும் அச்சம் அற்ற வாழ்வையும்
யுத்தம் அற்ற பூமியையும்
அமைத்து நாம் கொடுத்திடுவோம் ,
அந்தக் காலம் மிக விரைவில் நம் கையில்
மனிதம் உணரப் படும் போது
மனிதனும் புனிதனாவான்