வெறுப்பின் ரகசியம்

உன்னை வெறுக்க ஆயிரம்
காரணம் கண்டுபிடித்து
சண்டை போட்டாலும்
மனம் என்னவோ விரும்பத்தான்
செய்கிறது வெளிக்காட்டும்
வெறுப்பை உள்ளே உள்ள
அன்பு அடக்கி விடுகிறது
அடுத்த நொடியே அடங்கி
விடுகிறேன் யாருக்கும்
அடங்காத என்னை உன்
அன்பால் அடக்கி விட்டாய்
இருந்தும் காரணம் தேடுகிறேன்
உன்னை வெறுக்க அளவுக்கு
அதிகமான அன்பின்
வெளிப்பாடோ எனது
வெறுப்பின் ரகசியம்....

எழுதியவர் : உமா (6-Dec-14, 9:52 pm)
Tanglish : verubbin ragasiyam
பார்வை : 81

மேலே