சுழலும் தொலைபேசி

தொல்லை தொல்லை -கையடக்க
தொலை பேசியாலே தொல்லை
படிக்கும் மாணவிகூட மாணவன் கூட
கையிலும் தொலைபேசி இருக்கு

சம்சோங் போன் என்ன கமரா போன் என்ன
சில சில நேரத்தில் பலருடைய கையில்
பாலர் படிக்கும் பாடசாலை என்ன
படம் எடுக்கும் சூட்டின் இடமா

தொலைபேசி இல்லாம
தலைதூக்குது அந்தஸ்து பிரச்சனை
பட்டினி போடுகிறாள் பிள்ளையையும் தன்னையும்
பணத்தை செலவிடுகிறாள் தொலைபேசிக்கு

பட்டப் படிப்பு படித்தவர்கள் கண்டு பிடித்தன -அட
விரைவில் தொடர்பினை மேற்கொள்ள
இந்த மனிதர்களோ அனாவசியமாக பயன்படுத்தி அழிக்கின்றன
தம் வாழ்வை

எழுதியவர் : தர்சிகா (8-Dec-14, 9:40 am)
Tanglish : sulalum tholaipesi
பார்வை : 872

மேலே