நட்சத்திரங்கள் -எரி நட்சத்திரங்களாவதேன்

என்னவளைப்பார்த்து
நான் - அன்றொரு
நாள் ....இரவில் ...

மொட்டை
மாடியில் நின்றுகொண்டு ...

கண்ணே!

நட்சத்திரங்கள் -எரி
நட்சத்திரங்களாவதேன்?
என்பதை அறிவாயா!
என்று கேட்டேன்.....

அவள் --
எனக்குத்தெரியவில்லை ..
நீங்களே சொல்லுங்கள்
என்றாள்.

நான் -
சொல்லத்தொடங்கினேன் ...

விண்ணில் உலாவரும்
வெண்மதி-
பருவம் அடைந்ததைப்பார்த்ததும் ...

நட்சத்திரங்கள்
அத்தனையும்
அதைப்பார்த்து
கண்சிமிட்டுகின்றன.

ஆனால்...

அந்தப்பருவ நிலாவோ
எதையும் கண்டுகொள்ளாமல்
உலாவரும்.

அதனால்
அந்த நட்சத்திரங்கள்
வெறுத்துப்போய்
உன்னைப்பார்த்துக்
கண்சிமிட்டத்தொடங்கின.

மண்ணில் வட்ட முகத்துடன்
உலாவரும் நீயும் - அந்த
விண்ணிலவைப்போல்
கண்டு கொள்ளாமல்
உலாவந்தாய் .

ஓர்நாள் -நீ
என்னைமட்டும் பார்த்து
கண்சிமிட்டிய காரணத்தால்....

பொறமைகொண்ட அந்த
நட்சத்திரங்கள் ...நீயும்
கிடைக்கமாட்டாய்
என்பதறிந்து எரிநட்சத்திரங்களாகிவிடுகின்றன .
என்றேன்.

அது கேட்டு
என்னவள் புன்னகைத்தாள்.

அந்தப்புன்னகையின் ஒளியில்
மின்னும் நட்சத்திரங்கள் பல
மேலும் ஒளிகுன்றி
தோற்றுப்போயின.

எழுதியவர் : மா. அருள்நம்பி (8-Dec-14, 9:32 pm)
பார்வை : 104

மேலே