பொறாமைத்தீ
மலை
மலைத்தது
மங்கையுனைக்
கண்டதும் ...
மலைமகளாய்
மாறியும் பார்த்தது ..
போட்டியில் தோற்றது ..
முத்தமிட்ட மேகங்களிடம்
முறையிட்டது..
இவள் அழகைப் பாரேன்
என்றது ..
உனைத் தொட்டுப் பார்க்க
வந்த மேகத்தை
விரட்டினேன்..
கைகளை சுட்டுக் கொண்டேன்
அவ்வளவு பொறாமைத்தீ
அதற்கு உள்ளே ..
சுட்ட புண் ஆறுதற்கு
மருந்தில்லை ..
உன் கனிவுப் பார்வை
போதுமெனக்கு !