காயத்தின் அகராதி 02

கண்களில் ஆரம்பம்மானதினால்
கண்ணீரை பரிசாகத் தந்தாய்-உன்
கரம் பற்ற எண்ணியதால்தானே
கதிர் போல சுட்டெரித்தாய்

காதல் கொண்டு கடைசியில்
காயங்கள் தந்தாய்
கானகமும் இவ்வளவு தனிமையில் இல்லை -உனக்காக
காத்திருந்து காலம் போகையிலே

கிளி போல உன்னைப் பற்றி பேசியதால்
கிளிஞ்சளாக என் மனதை மாற்றிச் சென்றாய்
கிண்டல் செய்யும் மாக்கள் மத்தியில்
கிறுக்கு பிடித்து அலைகிறேன் -உன் நினைவால்

கீழே வீழ்ந்து கிடக்கேறேன் உன் நினைவுகள் பதிந்த இடத்தில்
கீர்த்தனை பாடிக் கொண்டு திரிகிறேன்
கீதம் கேட்டாவது மனதை மாற்ற
கீழ்வானம் சரிந்தது போல இரு விழிகளும் சரிந்து போனதே

குழந்தை போல அழுகிறேன்
குவளையாய் கவலைகள் எனை சூழவே
குடி புகுந்த உன் இதயத்தில் -இந்த
குமரியை குமர விட்டு பார்த்தாயே

கூடுதாவும் பட்சியாய் போல -எனை
கூண் டோடு அடைத்தாயே
கூந்தலுக்ககுள்ளே உன்னை சிறைபிடிக்க-என்
கூடுதலான அன்பால் இன்று
கூனி போலே சுமந்தேனே உன் நினைவை

கெஞ்சும் மழலை போல அடம்பிடிக்கிறேன் உன் மனதில் இடம் பிடிக்க
கெடுதி என நினைக்காதே
கெட்டவன் என்று தூற்றுவர் ஏதிலார் -புத்தியும்
கெட்டு பக்தியும் செத்து இன்று உயிர் வாழ்கிறேன் புவியிலே

கேள்விகள் மட்டுமே வாழ்க்கையாய்
கேடுகள் மட்டுமே வரங்களாய்
கேடிப் பயலாய் என் மனதை மோசடி செய்தாயே
கேட்டுக்கொள் இன்று உனக்காக -என் இதயம்
கேலிக்கையாக பிறர் முன்னே மாற்ற வழிவகுத்தது

கைதட்டி சிரிக்கும் உலகிலே -என் வாழ்க்கை
கைகேயி சூழ்வினைப் படலம் போல -என்
கை நழுவிச் சென்றதே
கை குட்டை போல என் காதலை
கைதியாக்கி சிறைபிடித்தாயே

கொள்ளை அன்பால்- எனை
கொல்லும் பார்வைகள் தானே
கொடையாக இன்று கொள்வனவு செய்தாய்
கொஞ்சும் தமிழ் மறந்து
கொக்கு போல ஒற்றை காலில் உனக்காக காத்து நிக்கிறேன்

கோடை மழை போல
கோதை இவள் மனம்
கோணலாகிப் போனதே
கோழையாகி இன்று
கோயில் இல்லா தெய்வம்
கோபம் கொண்டு நிற்பது போல

கெளரவம் இழந்து போய் விட்டேன்
கெளசியமான காதலால்

கண் மூடி திறந்து
காதலை பிறப்பித்து -அதனால்
இதயத்தை இறப்பித்து
இடம் மாற்றம் அடைந்தது காதல் -அவன்
இதயத்தை விட்டு
கண்ணீர் காதலின் விடை என்று கூறுவதே
காயம் பட்ட மனதின் தார மந்திரமாக மாறியதே ....

எழுதியவர் : keerthana (8-Dec-14, 10:26 pm)
பார்வை : 112

மேலே