பிறவியின் பயன்
வனம் ஒன்று ..வளரும் மரங்கள் பல..
மரம் ஒன்று..விரியும் கிளைகள் பல..
கிளை ஒன்று.. துளிர்க்கும் இலைகள் பல..
இலை ஒன்று.. உள்ளே அணுக்கள் பல..
அணு ஒன்று ..உள்ளுறையும் அற்புதங்கள் பல..
கடல் ஒன்று..கலக்கும் நதிகள் பல..
வானம் ஒன்று.. கோள்கள் பல..
மனம் ஒன்று.. எடுக்கும் முடிவுகள் பல..
மனிதம் ஒன்று.. பிரிக்கும் சாதிகள் பல..
இறை ஒன்று.. வணங்கும் மதங்கள் பல..!
ஒன்று பலவாக மாறிடவும்
பலவும் ஒன்றாக கலப்பதுவும்
சுழற்சியாய் நடக்கின்ற விந்தையுலகில்
ஒன்றுக்கும் உதவாமல்
இருந்தென்ன ?.. இறந்தென்ன..?
பண்பிலா விந்தை மனிதரும்
வாழ்ந்துதான் பயனென்ன ?
நிதம் ஒரு நல்லதை செய்திட
பிறவியின் பயன் வேறென்ன?