குற்றவுணர்ச்சி கொள்கிறேன்

(கவிஞர் சுப்ரமணிய பாரதியின் "மெல்லத் தமிழ்இனிச் சாகும்" கவிதையை படித்த போது ஏற்பட்ட மனக்குமுறலை இங்கு பதிவு செய்துள்ளேன்)


செந்தமிழே!
அன்று
குடையாய் நின்று
குழலாய் இசைத்து
குறிஞ்சி தந்து- எங்கள்
குலமகளாய் நீ நின்றாயே!!
இன்றோ
அயல் மொழி வந்து-எங்களை
அருவருக்கச் செய்து-உன்னை
அவமானம் என்று சொன்னானே!!
அடையாளம் இழந்து
அவமானத்தோடே வாழ்கிறாயே!!

அன்று
குருதிகள் உடைந்து
ரத்தம் வழிந்து
மாய்கின்றபோதும்
மானம்! மானம்!
என்றோமே !!
இன்றோ
தன்மானம் இழந்து
தலைகுனிவு அடைந்து
இழிவுபட்டோமே!!

அன்று
அகமாய் நின்று
புறமாய் வந்து
அமுதம் தந்து
வலிமையுடன்
வாழ்வளித்தாயே!!
இன்றோ
கற்பை இழந்து
கலங்கம் கண்டு
கண்ணீர் மல்க
என்னை நோக்கி பார்க்காதே
நான்
குற்றவுணர்ச்சி கொள்கிறேன் !!!

எழுதியவர் : (10-Dec-14, 10:42 am)
பார்வை : 124

மேலே