காதலில் சோகம்

காதலில்
கொஞ்சம்
சோகம்.....வந்து
மோதும்.....ஆனபோதும்
ஏதோ
ஆறுதல்
தந்தே தீரும்......!!

காயங்கள்
இல்லாக்
காதல்
கலிகாலத்தில்
எங்கும்
இல்லை......!!

சொல்லாமல்
வந்த
காதல்
பதில்
சொல்லாமல்
பாதியிலேயே
பறிகொடுத்த
பலர்....இல்லாமல்
போனதும்
இங்கே.....உண்டு.....!!

கால ஓட்டத்தில்
ஓடிமறைந்த
ஒரு சிலரின்
கல்லூரிக்
காதலும்
காணாமலே
போனது......!!

விடை பெறும்
வேளையிலும்
வெளியே
வரமறுத்த
ஒருசிலரின்
விருப்பங்களால்
வாழ்நாளில்
சில
பக்கங்கள்
துக்கங்களால்
நிரம்பியே
போனதோ....?!

வாழைத்
தோப்புக்குள்
புகுந்த
யானை போல.....
மனசிற்குள்
புகுந்த
காதலும்
துவம்சம்
செய்துவிடும்
உன்னை.......!!

காற்றில்
மிதக்கும்
கனவுகள்
தரும்
காதல்.....சட்டென
தரையில்
வீழ்த்தி
விட்டுச்
செல்லும்......!!

எழுதியவர் : thampu (11-Dec-14, 4:04 am)
Tanglish : kathalil sogam
பார்வை : 223

மேலே