நானும் ஒரு கவிஞ்சன்

நானும் ஒரு கவிஞ்சன்

கற்பனைகள் சுமந்த
என் இதயம்..கனத்தாலும்
கவிதை எழுத கற்பனைகள்
நிழலாய் என் முன் நிற்க..

நானும் எழுதினேன்
சில வரிகளை
அடித்தும்.திருத்தியும்
அமைந்ததே ஒரு கவிதை.

அழகாய் அற்புதமாய்
சிந்தனையில் சிதறிய
சில வார்த்தைகள்
சிறப்பாய் சிரித்தது.

என் சித்தனையும்
வளர்ந்தது என்னை
அன்பாய் வரவேற்றது
ஒரு கவிஞ்சனாய்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (11-Dec-14, 10:32 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : naanum oru kavinjan
பார்வை : 82

மேலே