நானா எழுத்தாளர்

எழுதியே ஆக வேண்டும் என்று
ஏங்கியே தவித்தேன் நான்
எட்டவில்லை என்
எழுத்துகளுக்கு எண்ணமாய்.
எப்படியோ யோசித்தே
எழுதி பார்தேன்
எனக்கே பிடிக்கவில்லை
எழுதியதை எரிந்தே விட்டேன்.
எப்படியாவது எழுதியே
ஆக வேண்டும் என
எண்ணியே மீண்டும் எழுதினேன்
ஏதோ கொஞ்சம் பிடித்தது..
எழுதியதை ஒரு
வார இதழுக்கு
அனுப்பி வைத்தேன்
எழுத்தாளருக்கு நன்றி என..
பல கணிப்புகள் வந்தது
எனக்கே புரியவில்லை
எப்படி என்று..இன்று
நானும் ஒரு எழுத்தாளர்..