இதுவே என் கேடயம்
கேடயம் வாங்க வேண்டும் என்று
கேள்வியாய் நின்றது என் மனதில்
கேள்வி குறியை தகர்க்க
கேட்டேன் ஒரு கேள்வி என்ற.
தலைப்பில் ஒரு கவிதையாய்
வரைந்தேன் என் மனதில்.
மனதில் வரைந்ததை
காகிதத்தில் வரவழைத்தேன்..
படித்தோர் எல்லாம்
பாராட்டினர்..பார்த்தோர்
எல்லாம் வரவேற்றனர்
கேடயம் வேண்டும் என.
கேட்ட என் மனதுக்கு
நன்றியும் பாரட்டுகளுமே
கேடயமாய் தெரிந்தது
என் இதயத்திற்க்கு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
