இது அவசரமான உலகம்
... "" இது அவசரமான உலகம் ""...
பிறப்பு இறப்புக்குமிடையே
சுவாரஸ்ய புதினன்களாய்
மனிதரின் வேகங்கள்
தேவைகளின் வேட்டையில்
தேடிட முடியாத இடத்தில்
கண்களுக்கு புலப்படாத
தூரத்து சிறு புள்ளியானார்
அவசரமான வாழக்கையின்
ஓட்டத்தில் அடுத்தவரை
அனுசரிக்க முடியாவேகம்
பணத்தைதேடும் பந்தைய
குதிரையாய் முந்திக்கொண்டு
அன்னையின் கைபிசைந்த
அண்ணம் உண்டகாலம்போய்
சாண் வயிற்றுக்கு முழமோட்டம்
உண்ணுவதற்கே உழைக்கின்றார்
ஓரிடமிருந்து உண்ண முடியாதே
சாந்தமாய் நடக்க மறந்த
மனிதர்கள் சாலையோரத்தில்
உணவை கையேந்தி நின்றவாறே,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...