நீயும் பாரதி
கவி எனும் திமிர் உண்டா
அதற்கேற்ற திறம் உண்டா
மாற்றம் தரும் மார்கமுண்டா
ஏற்றம் தரும் எழுத்துண்டா
கவலையற்ற மனம் உண்டா
கரைந்துவிடும் குணம் உண்டா
சமூகம் மேல் சினமுண்டா
சீர்திருத்த உன்னில் வழியுண்டா
மார்தட்டிக்கொள்
பார் முழுதும் சொல்
நீயும் பாரதி என