கண்கள் கண்ட தேவதை

பதித்தாரை பாவச் செயல் புரிந்து
நயக்காதல் நட்புடன் கலந்து
மண்ணில் மண்டியிட்டு சமர் புரியும்
தருணம் கண்ட காதல் கண் !

கன்னித் தாரகை கையால் பிசைந்து
பசுத் தாயின் மடிப்பால் எடுத்து
மகிழ்ச்சித் தந்தையின் மடியில் பருகிய தேவாமிர்தம் !

நடுக்குளத்து தாமரை சுத்தகையில் எடுத்து
கடல் கலக்க ஆற்று நீர் தெளித்து
உயர நின்று தூய மழைக் சாரல்
கொண்டு பரிசளித்தது போல்
அவளது கன்னங்கள்!

கடற்கரை மணலில் தண்ணீரைக் கொட்டியது போலும்
ஆற்றங் கரை உயர் குணமும்
பகிந்தாடுகின்றது
நிலை கண்டு
குணத் தாரகை !

காற்றுப் பாதையில் காற்றாடி பறந்து
பாவை முகம் சொல்லும் பறந்து செல்கிறேன்
காற்றாடியாய் மட்டுமல்லாமல்
காற்றாடி நூலும் போல் !

பாதங்களில் சிரித்துக் கொண்டிருக்கும்
அவளது நிழல்கள் அறிவிக்கின்றது
தேவதை வருகிறாள் என்று !

நிறம் குணம் தாங்கி நிற்காது
குணம் நிறம் தாங்கி நிற்காது
விளக்கம் தரும் அவளது நிறமும் குணமும் !

பெயர் கண்டால் தொடர் கொள்வேன்
முகம் கண்டால் மூங்கிலாய் மாறுவேன் என்று
இரண்டும் கானாப் பறவையாய்
பறக்கிறேன் சிறகின் வலியுடன் !

சாலைகள் கண்டு ரசித்தும்
பிரம்மனின் ரசனைக்கும் , ரசித்தும்
தேரடி ரசித்தும் தேவதையை
நானும் காணும் தருணம் என்றோ !

காத்திருப்பு காதலுக்கு சமம்
மனம் காதலுக்கு சமம்
சமமும் உண்டு சமர்ப்பணமும் உண்டு !
மற்றொரு சமர்ப்பணத்தின் சம்மதிற்க்காக!

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (13-Dec-14, 10:18 am)
பார்வை : 88

மேலே