தமிழனென்று சொல்லடா -சுஸ்மிதா- போட்டிக்கவிதை

''தமிழனென்று சொல்லடா''

ஏன் சொல்ல சொல்கிறாய்,
அடையாளம் கொள்ளவா ?

இந்த இனமென்று மட்டுமா
கொள்வாய் ?

வீதிவரை விசாரனையெல்லவா
நடத்துவாய், என்ன சாதியென்று....

இருந்தாலும் சொல்கிறேன்
இனத்திற்கு நன்மையுண்டாகும்
என்ற எண்ணத்தில்.....

''நான் தமிழன் ''

அதற்கு,
ஏன்? 'சாதி' மல்லியில் மாலை சாற்றுகிறாய்....

உள்ளம் உரைக்க ஒன்ற மட்டும் சொல்கிறேன்....

முகம் முன்னாள் இருக்க
முகவரியை ஆராயாதே
தெருப் பெயரில் சாதி இருக்கலாம் ...
என் குருதியில் சாதிப் பெயர் இல்லை.

''நான் தமிழன் டா'' .....




V.SUSMITHA,
FINAL YR,
SDNB VYSHNAVA COLLEGE,
CHROMPET.....

எழுதியவர் : சுஸ்மிதா (14-Dec-14, 1:18 pm)
பார்வை : 154

மேலே