நீ வருவாய் என

விருப்பமற்ற வேண்டாப் பொருளாய்
மாறிப் போனேன் நான்!
வெற்றிட இடமாய்
காட்சியளிக்கிறேன் நான்!
செந்தனல் தீயினில் தினம் தினம் வீழ்ந்து
வாடிப் போகிறேன் நான்!
நீ எனைவிட்டு நீங்கியதில் இருந்து!
மீண்டும் நீ வருவாய் என எதிர்ப்பார்த்து
நம் காதலை மட்டும் பொதித்து வைத்துள்ளேனடி
பொக்கிஷமாய் என் மன அறையில்!