என்னை வறுமையில் வாட விட்டு

உனது திராட்சை கண்கள்
எனக்கு எந்த சத்தை தந்தது?

உனது ஆப்பிள் கன்னம்
எனது உடலுக்கு எந்த பலத்தை தந்தது??

கேரட் உதடுகள்
என் கண்களை வளர்த்தது?

உன் வளைந்த கோவைக்காய் காதுகள்
எனக்கு என்ன தர நினைத்தது??

உன் பிஞ்சு வெண்டை விரல்கள்
என்னுள் எத்தனை சத்தை கொடுத்ததது??

உன் புடலங்காய் இடை
எனக்குள் என்ன தர நினைத்தது???

உன் வெள்ளரி பாதங்கள்
எனக்குள் என்ன மாயம் தந்தது??

இத்தனைக்கும் மேலாக
அத்தனை சத்துக்களும் நிறைந்த
உன் மனது
என்னுள் எத்தனை விந்தை செய்தது??

உன்னுடன் நான் பழகிய நாட்களில்
உன்னை நான் தொடாமலே
என்னை உரமிட்டு வளர்த்த
உன் உடல் பாகங்கள் அனைத்தும்

இன்று என்னை வறுமையில் வாட விட்டு
கொன்று சென்றதென்ன??

எழுதியவர் : சாந்தி ராஜி (14-Dec-14, 11:06 pm)
பார்வை : 485

மேலே