உன் மீது எனக்கென்ன கோபம்
உன்மீது எனக்கென்ன கோபம்
எல்லாமே நான் செய்த பாவம்
எதுவரைக்கும் தொடருமிந்த சோகம்
புரியாத புரிதல்தான் லாபம்
வாழ்க்கையில் இதுஎன்ன கோலம்
தாழ்நிலை தானோ உன் ஜாலம்
இறைவா இது என்று மாறும்
மறைவாக நீயிருந்தால் எது கூடும்
தலைவா உன் தாள்கள் சரணம்
இனிவரும் நாளில் நீ தரவேண்டும்
இது போன்றோரின் துன்பத்திற்கு மரணம்