என் உயிரையும் எடுத்துவிட்டு செல் 555

உயிரே...

உன்னை நிலவென்று
சொன்னேன்...

இருளில் இருக்கும் எனக்கு
வெளிச்சம் தருவாய் என்று...

நீ சூரியனாய்
சுட்டெரிக்கிறாய்...

சூறாவளியாய் என்னை சுழல
வைப்பாய் என்று தெரியாமலே...

உன்னை தென்றல்
என்றேன்...

நீ உச்சரிக்கும் வார்த்தை
எல்லாம் கவிதை என்றேன்...

என் நெஞ்சை குத்தும்
முட்கள் என்று தெரியாமலே...

உன்னை என் உயிர்
என்றேன்...

என் உயிரை எடுப்பவள்
என்று தெரியாமலே...

விலகிவிட்டாய்
நீ எளிதாக...

விலக முடியாமல்
உன் நினைவில் நான்...

ஒன்று மட்டும்
எனக்காக செய்வாயா...

முடிந்தால் எடுத்துவிட்டு
செல் என் உயிரையும்...

போதும் நீ தரும் வலி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Dec-14, 3:33 pm)
பார்வை : 850

மேலே