பகல் வேஷம்

இரவுச்சாயம் பூசி
உருமாறி
பதுங்கிக்கொண்டிருக்கிறது
பகல்..
காலைவெயில் பட்டு
வெளுத்துவிடுகிறது
கறுப்புச் சாயம்..
ஓ,
இதுதான்
பகல் வேஷமோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Dec-14, 4:21 pm)
Tanglish : pagal vesam
பார்வை : 112

மேலே