அவள்

..............................அவளை பார்க்க
ஒரு தருணம் தந்தது
பரிட்சை- பாழாய் போன
பனிமலரிவள்- பாதம்
தொட்ட பின்னே
பைத்தியமானேன்- பருவ மங்கையவள்
புன்னகையிலே
பூரித்து போன - இதயம்
புல்லரிக்க வைத்த பூவிளக்கு
அவள்
அவள் ஓரவிழிப்பார்வைக்கு
அலையும் சித்தம் தெளிந்த
பித்தன் நான்
பெண்ணென்றால் பேயும் இரங்கும்
பொய்யென்று கண்டேன் உன்
....................இதயம் கல்லாயிருப்பதை அறிந்து....

எழுதியவர் : அசாருதீன்.ந.M (16-Dec-14, 5:25 pm)
சேர்த்தது : Mohamed Asardeen
Tanglish : aval
பார்வை : 134

மேலே